கால நதி (நூல் விமர்சனம்)

நகர்வு

kaala-nathi-original

சோலைமாயவன்

“இன்று காதலர் தினம் இந்த நாவலை ஒவ்வொரு குடும்பமும் படிக்க வேண்டிய அல்லது வாசிக்க வேண்டிய மிக முக்கியமான நாவலாக நான் கருதுகிறேன் தன் சாதி தான் உயர்ந்தது என்று தன் மகளையும் அல்லது தன் மகள் விரும்பிய அந்த ஆணையை கொல்லுகின்ற ஒவ்வொரு தகப்பனும் படிக்க வேண்டிய இந்த நாவல்…. “

ஒரு கதை எப்படி இருக்க வேண்டும் என்றால் வாசகன் கையில் அது கிடைத்தவுடன் அவனை விட்டு விலகாமல் இருக்க வேண்டும் இல்லை அவனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். வாசிப்பவர்கள் சோர்வடையாமல் கதை ஓட்டத்தில் தன்னையே கரைத்துக் கொள்வதாக சொல்லுகின்ற முறை இருக்க வேண்டும். அந்தவகையில் காலநதி மிக நேர்த்தியாக எழுதப்பட்ட அல்ல சொல்லப்பட்ட ஒரு நாவல் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அவர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அட்டைப்படம் முதல் கடைசி அட்டை வரை கண்களை உறுத்தாத வகையில் மிக அழகாக வடிவமைத்து உள்ளார். இந்த வடிவமைப்பு இந்த நாவலை படிப்பதற்கு அல்லது வாசிப்பதற்கு மிகப்பெரிய தூண்டுகோலாக இருந்தது. இருவேறு சமூகத்தை சேர்ந்த இருவர் வீட்டிற்கு தெரியாமல்திருமணம் செய்து கொண்டார்கள். பின்பு அந்தக் குடும்பங்கள் எவ்வாறு சிதைந்து போகின்றன என்பதையும் அதனால் உறவுகள் இல்லாமல் வாழும் பிள்ளைகள் மனநிலையையும் காட்சிப்படுத்திய விதம் அருமையாக இருக்கிறது

பிறந்தது முதல் ஒன்றாக ஒரே குடும்பத்தில் வாழ்கின்ற சகோதரிகள் இந்த பிரச்சனையால் ஏற்படும் மன நெருக்கடியை மனவேதனையை படம் பிடித்து காட்டுகிறது இந்த நாவல். இன்று காதலர் தினம் இந்த நாவலை ஒவ்வொரு குடும்பமும் படிக்க வேண்டிய அல்லது வாசிக்க வேண்டிய மிக முக்கியமான நாவலாக நான் கருதுகிறேன் தன் சாதிதான் உயர்ந்தது என்று தன் மகளையும் அல்லது தன் மகள் விரும்பிய அந்த ஆணையை கொல்லுகின்ற ஒவ்வொரு தகப்பனும் படிக்க வேண்டிய இந்த நாவல். குடும்பம் சொத்து சுயகௌரவம் சுயஜாதி என்று பிறர் சொல்வதை கேட்டு தன் வாழ்நாளை வாழ்நாளில் மகிழ்ச்சியை தனக்குப் பிறந்த குழந்தையின் மகிழ்ச்சியை தொலைகின்ற அப்பாக்கள் பின்னால் யாருமில்லாத வாழ்வின் கடைசியில் தன் துயரத்தை உணர்ந்த கமலியின் அப்பா தரும் வாக்குமூலம் அந்த கடைசி பத்தி உண்மையில் மனதை நெகிழச் செய்கிறது.

“உடம்புல வயசும் தெம்பும் இருந்தப்ப பிள்ளைகளைவிட எது எதுவோ பெருசா தெரிஞ்சது இப்ப வயசு ஆகி மூலைல கிடைக்கிரப்ப தன் எல்லாம் தெரியுது எதை எதையோ எவன் எவனையோ பெருசா நினைச்சு பிள்ளைகளை விட்டு விடுகிறோம். முடியாமல் கிடைக்கறப்ப அப்ப பெருசா நினைச்ச எதுவுமே துணைக்கு வரவில்லை பெத்த புள்ளைங்க தான் தான் வருது இப்பதான் புரியுது பெத்த பிள்ளைகளை விடவும் அவர்களை விடவும் எதுவும் பெருசில்ல எங்க காலம் தான் இப்படியே போயிடுச்சு நீங்களாவது பிள்ளைகளை புரிஞ்சுகிட்டு ஒரு வாழ்க்கையை வாழ பாருங்க அதுதான் எப்பவும் நமக்கு நல்லது அவர் பேசி முடிக்கும்போது கமலின் கண்களில் காரின் அருகில் நின்று கொண்டு இவர்களுக்காக காத்திருக்கும் தருணம் தான் தெரிந்தான்”

இந்த கடைசிப் பத்தி தான் இந்த நாவலின் உயிர் நாடியாக விளங்குகிறது

முக்கிய கதாபாத்திரமான கமலியியை சுற்றியே வாழ்க்கை தான் இந்த நாவல் காட்டுகிறது. தங்குதடையின்றி ஒரு காட்டாறு போல எழுத்துக்களும் காட்சி அமைப்பும் ஒரு வாசகனை இட்டுச் செல்கிறது. கமலி தருண் அதுல்யா நீவி குரு முகுந்தன் பூரணா சிவா என குறைந்த கதாபாத்திர ம்வைத்துக்கொண்டு நாவலில் எந்தவித சுணக்கமும் இல்லாமல் கதையை கொண்டு போவதில் முதல் நாவல் என்று சொல்ல முடியாத அளவில் கதை சொல்கின்ற முறையும் ஆசிரியருக்கு லாவகமாக கை வந்திருக்கிறது

கமலி பூர்ணா சிவா இம்மூவரும் ஒரே குடும்பத்தில் பிறந்து வளர்கிறார்கள் கமலி அப்பாவும் பூர்ணாஅப்பாவும் அண்ணன் தம்பியாக கூட்டுக்குடும்பம் வாழ்கிறார்கள் கமலிசித்தப்பாவுக்கு ஒரே மகள் பூர்ணா. கமலையும் சிவாவும் மேல்படிப்புக்காக வெளியூர் சென்றுவிட பூர்ணாவை தனிமை வாட்டுகிறது அப்போது அவளும் உள்ளூரில் இருக்கிற கல்லூரிக்கு செல்கிறாள் அதே ஊரில் இருந்து கல்லூரிக்கு செல்லும் முகுந்தன் பேச நாளடைவில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறுகிறது அந்த செய்தி அந்த வதந்தி ஊர் முழுக்க பரவ பூர்ணாவுக்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடு செய்கின்றனர் கல்லூரியின் கடைசி நாளன்று பூர்ணாவும் முகுந்தனும் ஊரைவிட்டு செல்கிறார்கள். ஊரில் பெரிய குடும்பமாக வாழ்ந்த கமலின் குடும்பம் இதனால் சிதைந்து போகிறது. பிரிந்த குடும்பங்கள் எவ்வாறு சேர்ந்தன அதற்காக ஆசிரியர் எடுத்த கொண்ட களம் மிக முக்கியமானது. சிறு தானிய துரித உணவங்கள் அங்கு வேலை செய்பவரிடம் காட்டும்கண்டிப்பும் அக்கறையும் அதே நேரத்தில் சிறப்பாக வேலை செய்கிற ஊழியர்களை மதித்து பாராட்டுவதென காட்டுவது முதலாளிகள் மனிதநேயத்தோடு இருந்தால் ஊழியர்களும் சிறப்பாக இருப்பார்கள் என்பதை காட்டுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு பூர்ணாவும் கமலியிம் சந்திக்கும் காட்சியும் அதன் பிறகு அதுல்யா மனம் படுகிறத துயரத்தையும் அடுத்து அடுத்து என்ன நிகழப் போகிறதோ என வாசகனை மனதை ஒரு வழியாக ஆசிரியர் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கதைமாந்தார் அழுதால் வாசகனை அழவைத்துவிடுகிறார். 21 அத்தியாயமாக எழுதி இருக்கிறார் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒரு தலைப்பு அதன் பின் ஒரு சிறு கவிதை அந்த கவிதைக்குள் அந்த அத்தியாயத்தின் கதையை சொல்லும் முறையென ஒவ்வொன்றையும் அழகாக கையாண்டு இருக்கிறார்

“பல சண்டைகளுக்கு

தொடக்கமாய் இருக்கும்

வார்த்தைகள் தான்

பல நேரங்களில்

அதன் முடிவாகவும்

அமைந்து விடுகின்றன….”

கால நதி தலைப்புக்கேற்ற கதை. காலத்திற்கு எல்லாவற்றையும் மாற்றும் சக்தி உண்டு. எவர் தடுத்தாலும் மாற்றத்தை நிறுத்த முடியாது. ஊர் என்ன சொல்லும் என்று ஊருக்காகவும் பிறர் என்ன சொல்லுவார்களோ என பயந்து பயந்து வாழ்பவர்கள் இந்த சமூகம் அவர்களை பூர்ணாவின் அப்பாவை போல் தூக்குக்கயிற்றில் தொங்கவிட்டுதான் மறுவேளை பார்க்கவும். கோயம்புத்தூர் மாவட்டத்தை கதைக்களமாக வைத்திருப்பதே ஆசிரியர் மன தையரித்தை பாராட்டவேண்டும்

ஆணவக்கொலை நிகழும் இக்காலகட்டத்தில் இந்த நாவல் அதிகமாக வாசகர் கவனத்திற்கு கொண்டுசெல்வது இந்த நாவலை வாசிப்பவரின் கடமை என சொல்வேன். முதல் நாவல் என்று சொல்லாத அளவுக்கு ஆசிரியரின் தொடர் வாசிப்பும் அவர் சமூக கண்ணோட்டம் நாவல் முழுக்க தென்படுகிறது

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page