மெக்ஸிக்கோ (நாவல் விமர்சனம்)

நகர்வு

Mexico-Novel

நான் ஒரு திரைப்பட பித்தன். 1 நாளில் 1 படமாவது பார்க்காமல் படுப்பது கிடையாது. ஆனாலும் நாவலா, திரைப்படமா என் உணர்வு படர்கைக்கு விஸ்தீரணமான எல்லையை நிர்ணயிப்பது எனும் போட்டியில் நாவல்களே முன்நிலையை தமதாக்கி கொண்டிருக்கின்றன.
ஆனாலும் நான் நாவல் பித்தன் இல்லை. உதாரணத்திற்கு காதல் என்னும் உணர்வை எடுத்து கொள்வோம். பல திரைப்படங்கள் பல பாணியில் என் உணர்வுகளை கிளர்த்தி சென்றிருக்கின்றன. உதாரணமாக கற்றது தமிழ், note book, blue is warmest colour,ராவணன்…. இப்படி பல. சின்னஞ்சிறிய காடசிகள் கூட என்னை கவர்ந்திழுத்த படங்களும் இதிலுண்டு. ஆனால் இவை அனைத்தும் காட்சிஅமைப்பு எனும் ஒற்றை சொல்லினால் என் கற்பனையை மட்டுப்படுத்திவிட்டன.

ஆனால் நாவல்கள் அவ்வாறில்லை. நான் வாசித்த காதல் நாவல்கள் பல ரஷ்ய மொழிபெயர்ப்பு நாவல்களே. அதில் ஒலேஷியா,ஆஸ்யா, வசந்தகால வெள்ளம்,செம்மணி வளையல் போன்றன இன்றும் என்மனத்தில் கிளர்ச்சி ஊட்ட கூடியன. இக்களத்தில் எனக்கான கதா நாயகிகள் என்னால் எனக்கு பிடித்தமான முறையில் உருவாக்க பட்டார்கள். ஏன் அருவருப்பான விடயங்கள் கூட எனக்கு அருவருப்பாக உள்ளவாறே உருவாக்க பட்டன. இவ்வாறான விடயங்கள் திரைப்படங்களில் இருப்பதில்லை. பிடிக்குதோ இல்லையோ அவள் தான் நாயகி அவன்தான் hero, அவன்தான் வில்லன். இதனாலேயே நாவல்கள் என்றும் கிளர்ச்சி ஊட்டக்கூடியன.

அவ்வாறான நாவல்களில் ஒன்றாய் இன்று என்பட்டியலில் இளங்கோவின் மெக்சிக்கோவும் எதேச்சையாய் நுழைந்து விட்டது.
மறுபடியும்  எங்கட பெடியலட மொழில  சொல்றன் நாவல் “வேற மட்டம்” வாசிச்சு முடிய கெலிச்சு போவியள்.
சொல்ல வந்ததை மறந்துவிட்டேன் என் பழமையானவன் இன்று மாலை மெக்சிக்கோவில் கிளர்ந்தெழுந்து விட்டான்.


— மித்திரன் வரதன்

நாவல் : மெக்ஸிக்கோ

இளங்கோ

வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்

விலை.ரூ.200

தொடர்புக்கு 8754507070

பதிவை பகிர

பின்னூட்டம் இடுக


You cannot copy content of this page