‘எதிர்நீச்சல் ஆதி குணசேகரன்’ மாரிமுத்து திடீர் மரணம்… 

நகர்வு

Actor-Marimuthu

சென்னை: பிரபல இயக்குநர், நடிகர் மாரிமுத்து இன்று (செப்.8) காலை மாரடைப்பால் திடீரெனக் காலமானார். அவருக்கு வயது 56.

சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் மாரிமுத்து. 

இதில் இவர் பேசும் வசனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இவர் தொடர்பான மீம்கள் சில தினங்களுக்கு முன் டிரெண்ட் ஆகின.

இவர் பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ’கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ உள்ளிட்ட படங்களை இயக்கியும் உள்ளார். 

’பரியேறும் பெருமாள்’ படத்தில் நாயகியின் தந்தையாக நடித்த இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. 

அண்மையில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இன்று (செப்.8) காலை 8.30 மணியளவில் ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது மாரிமுத்து திடீரென மயக்கம் போட்டு விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

இன்று மாலை அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்துக்கு அவரது உடல் இறுதி நிகழ்ச்சிகளுக்காகக் கொண்டு செல்லப்படுகிறது. 

“இந்தம்மா ஏய்” எனும் வசனத்தால் மக்களைக் கவர்ந்த நடிகர் மாரிமுத்துவின் இறப்புச் செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், மாரிமுத்துவின் திடீர் மரணம் குறித்து ‘எதிர்நீச்சல்’ சீரியலின் இயக்குநர் திருச்செல்வம் கூறியதாவது: இதைக் கொஞ்சம்கூட ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது. இன்று காலையில் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வருவதாக அவர் சொல்லியிருந்தார். அனால், திடீரென இப்படி நடக்கும் என்று நங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. உடல்நிலை சரியில்லாமல் இருந்து இப்படி ஆகியிருந்தால் அது வேறு. ஆனால், இது எங்களுக்கெல்லாம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவு மாரிமுத்துவின் குடும்பத்தினர், ‘எதிர்நீச்சல்’ குழு, அவரது ரசிகர்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய இழப்பு!  

பலரும் மரிமுத்துவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page