“மீண்டுமோர் அறிவியல் புனைவு சினிமா”: ஆர். ரவிக்குமார்

நகர்வு

Ayalan

சென்னை: ’இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் ‘அயலான்’.

கடந்த 2018-ம் ஆண்டு பணிகள் தொடங்கி கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப் போனது. 

இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் முதலானோர் நடித்துள்ளனர்.

அண்மையில் வெளியான இப்படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிகிறது.

இயக்குநர் ரவிக்குமார் அளித்த பேட்டி ஒன்றில் அடுத்த படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

’அயலான்’ படம் தாமதாம் ஆனபோது இந்தப் படத்தை எடுக்க திட்டமிட்டதாகவும், பின்னர் இதனை ‘அயலான்’ ரிலீஸுக்குப் பிறகே தொடங்கலாம் என்று முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

பல்வேறு கதைகளை எழுதி, அதில் இறுதியாக ஒன்றைத் தேர்வு செய்ததாகவும், ‘அயலான்’ படத்தின் வெற்றியே தனது புதிய படத்தின் வேகத்தை அதிகரிக்கும் என்றும் ரவிக்குமார் கூறியுள்ளார்.

’இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ பாணியில் இந்தப் படமும் அறிவியல் புனைவுக் கதையாக இருக்கும் என்றும் தெரிகிறது.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page