பெண் ஓட்டுநர்கள்: மலையாளத் திரையுலகில் மற்றுமொரு புரட்சி! 

நகர்வு

female-driver

கொச்சி: கேரளாத்தின் மலையாளத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமான ‘பெஃப்கா’வின்கீழ் 21 திரைப்பட சங்கங்கள் இயங்குகின்றன.

இவற்றில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மட்டுமே மலையாள சினிமாவில் பணியாற்ற முடியும்.

இவற்றுள் ஒன்றுதான் கேரளத் திரைப்பட கார் ஓட்டுநர்கள் சங்கம் என்பது.

இச்சங்கத்தின் 560 பேர் உறுப்பினராக உள்ளனர். அவர்களுள் 15 பேர் கேரவன் ஓட்டுநர்கள். அவர்கள் 560 பேருமே ஆண்கள்தான் என்ற நிலையில் இப்போது ஒரு புரட்சிகர மாற்றம் வரவிருக்கிறது. 

இந்தச் சங்கத்தில் தற்போது 5 பெண் ஓட்டுநர்கள் முதற்கட்டமாக நியமிக்கப்பட உள்ளனர்.

திரைதுறைப் பெண்களுக்குப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின்கீழ் மலையாள சினிமா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான கூட்டுறவு சங்கத்தில் சொந்த வாகனம் வாங்க குறைந்த வட்டியில் கடன் கொடுக்கப்படும்.

கேரவன் உள்ளிட்ட பெரிய வாகனங்களைப் பெண்கள் ஓட்டுவதற்கான பயிற்சியும் அளிக்கப்பட இருக்கிறது.

இதன்  உறுப்பினர்களுக்கான ஆண்டுச் சந்தா 7900 ருபாய். இதில், 3 ஆண்டுகளுக்கு பெண்களுக்கான உறுப்பினர் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது.

திரைத்துறையில் பெண் ஓட்டுநர்கள் இணைவது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது.                         

பதிவை பகிர

பின்னூட்டம் இடுக


You cannot copy content of this page