‘சில நொடிகளில்’ – திரைப்படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள்!

நகர்வு

Sila-nodigalil

ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘சில நொடிகளில்’.

வினய் பரத்வாஜ் இயக்கத்தில் வரும் 24-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடந்தது.

இயக்குநர் வினய் பரத்வாஜ் இத்திரைப்படம் குறித்துக் கூறியது:

“எனது முதல் தமிழ்ப் படம் இது. படத்தை முழுக்க முழுக்க லண்டனிலேயே படமாக்கினோம். தொடர்ந்து 35 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம்.

வழக்கமான த்ரில்லர் கதைகளைப்போல இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்றே இதன் கதையை உருவாக்கியிருக்கிறேன்.

த்ரில்லர், மிஸ்ட்ரி, காதல் என எல்லாமே இதில் உண்டு.

இசை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் நான்கு இசையமைப்பாளர்களை இதில் இசையமைக்க வைத்துள்ளேன். 

ரசிகர்கள் இதில் வித்தியாசமான யாஷிகாவைப் பார்ப்பார்கள்.

நடிகர் ரிச்சார்ட் இந்தப் படத்தில் சிறந்த நடிப்பை வழங்கி இருக்கிறார்” – என்றார்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page