அறம் இயக்குநர் கோபி நயினார் அடுத்து இயக்கும் புதிய படம் ‘கருப்பர் நகரம்’.
இதன் டைட்டில் அறிவிப்பை இயக்குநர் வெங்கட்பிரபு வெளியிட்டிருக்கிறார்.
2017-ம் ஆண்டு வெளியான ‘அறம்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈற்றவர் கோபி நயினார்.
அதில் நயன்தாரா மிகச் சிறப்பாக நடித்திருந்தார். அடுத்து நடிகை ஆன்ட்ரியாவை வைத்து ‘மனுஷி’ படத்தை இயக்கினார் கோபி நயினார்.
வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் நிறுவனம் இதைத் தயாரித்திருந்தது. இதன் முதல் தோற்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகியும் அந்தப் படம் குறித்து அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.
இப்போது அவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜேடி சக்ரவர்த்தி முதலானோர் நடிக்கின்றனர்.
அதற்கு ‘கருப்பர் நகரம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
இதன் டைட்டில் அறிவிப்புப் போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Add your first comment to this post