சிறந்த குறும்படங்களுக்குப் பரிசு வழங்கவேண்டும் – எடிட்டர் பி.லெனின் கோரிக்கை!

நகர்வு

B.Lenin_

கோவை: அண்மையில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன என்பது அறிந்ததே.

பிரபல எடிட்டர் பி.லெனின் இயக்கிய ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ எனும் ஆவணப்படம் சிறந்த கல்வி திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டது.

அதன் திரையிடல் கோவையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின்னர் பி.லெனின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக குறும்படங்கள் எடுக்கப்படுகின்றன.

தமிழக அரசு ஆவணப்படங்கள், குறும்படங்களுக்குத் தனியாக ஒரு வாரியம், தேர்வுக் குழு அமைத்து, சிறந்தவற்றைத் தேர்வு செய்து அவற்றுக்குப் பரிசுத் தொகை அளிக்க வேண்டும்.

நல்ல படைப்புகளைத் தயாரிக்க மானியத்தையும் அளிக்க வேண்டும்.

‘சிற்பிகளின் சிற்பங்கள்’ ஆவணப்படத்தை கிளஸ்டர்ஸ் மீடியா கல்லூரி சார்பில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கும் திரையிடத் திட்டமிட்டுள்ளனர்.

இப்படம் ஆசிரியர்கள் குறித்த நல்ல எண்ணங்களை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும்.

திரைப்படங்களைப் பார்த்தும் சில கெட்ட விஷயங்களை மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.

சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கம் முன்பு பாலர் அரங்கமாகச் செயல்பட்டுக் கொண்டு இருந்தது.

தமிழக அரசு அதில் குழந்தைகளுக்கான நிகழ்வுகள், திரைப்படங்களைத் திரையிட முன்வர வேண்டும்!” – இவ்வாறு அவர் கூறினார்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page