“கார்த்தியிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன்…” – ராஜு முருகன் 

நகர்வு

Karthi Raju Murugan Japan

சென்னை: ராஜு முருகன் இயக்கி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜப்பான்’.

தீபாவளிக்கு வெளிவரும் இந்தப் படத்தின் நாயகி அனு இம்மானுவேல். கே.எஸ்.ரவிகுமார், இளவரசு, சுனில், விஜய் மில்டன் உட்பட பலரும் நடித்துள்ள இந்தப் படத்தின் இசை ஜி.வி.பிரகாஷ்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இதனைத் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இயக்குநர் ராஜு முருகன் இதுகுறித்துக் கூறியதாவது: 

“நான் இயக்கிய ‘ஜோக்கர்’ படத்தின் ஆரம்ப வெர்ஷனை முதலில் நடிகர் கார்த்தியிடம் தான் சொன்னேன். அப்போது அதில் அவரால் நடிக்க இயலவில்லை.

பிறகு சந்திக்கும்போதெல்லாம், ‘எனக்கு ஒரு கதை பண்ணுங்க’ என்று சொல்லிக்கொண்டிருப்பார். அவருக்காக ஒரு கதை எழுதினேன்.

கொஞ்சம் ஜாலியான கதையாக, பெரிய படமாகப் பண்ணலாமே என்றார் அவர்.

அப்படி உருவானதுதான் இந்த ஜப்பான். இது ‘கமர்ஷியல் என்டர்டெயினர்’ படம். அதனுள்ளே புதிதாகச் சில விஷயங்களைச் சொல்கிறோம்.

இதில் கார்த்தி, திருடனாக நடிக்கிறார். ஆனால், டிரெய்லரை பார்த்துவிட்டு இதன் கதையை கணித்துவிட முடியாது.

நான் வாழ்வில் பார்த்த விஷயங்களின் தொகுப்புதான் இந்தப் படம்.

கார்த்தியிடமிருந்து நான் தனிப்பட்ட முறையில் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்!” – என்றார்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page