“வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் கொண்டாடுங்கள்” – கமல்ஹாசன் 

நகர்வு

Kamal-1

சென்னை: ஆண்டுதோறும் செப்டம்பர் 10ஆம் தேதி உலகத் தற்கொலை தடுப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது.

தற்கொலை தடுப்புக்கான சர்வதேச சங்கம் (IASP) உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் மனநலத்திற்கான உலகக் கூட்டமைப்பு (WFMH) ஆகியவை இணைந்து கடந்த 2003 முதல் இந்த நாளில் தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடதுகின்றன.

திரைக் கலைஞரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் ‘உலகத் தற்கொலை தடுப்பு தினம்’ குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: “மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. மனதை இழக்காதவரை நாம் எதையுமே இழப்பதில்லை!’ – எனும் ப.சிங்காரத்தின் வரிகளைத் துயருற்ற மனங்களை நோக்கிச் சொல்ல விரும்புகிறேன்.

தற்கொலை எண்ணம் தலைதூக்கினால் துளியும் தயங்காமல், நொடிகூடத் தாமதிக்காமல் ஒரு  ஆலோசகர்களின் உதவியைப் பெறுங்கள்.

‘செயலே விடுதலை’ என்பதை உணர்ந்து உங்கள் வாழ்விற்கு அர்த்தமும் அழகும் கூட்டும் காரியங்களில் தீவிரமாக ஈடுபடுங்கள்.

உயிரின் இயல்பு ஆனந்தம்!’ – என்கிறார் தேவதேவன்.

நமக்குக் கிடைத்த இந்த அற்புதமான வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் கொண்டாடுங்கள் என்று உலகத் தற்கொலைத் தடுப்பு நாளில் கேட்டுக்கொள்கிறேன்!” – இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page