“கேரளம் எனக்கு நிறைய கற்றுத் தந்தது!” – கமல்

நகர்வு

Keraleeyam

திருவனந்தபுரம்: ஆண்டு தோறும் கேரள மாநிலம் உருவான நாளான நவம்பர் 1-ஆம் தேதியை ‘கேரளீயம்’ என்ற கலாச்சாரா விழாவாகக் கொண்டாட கடந்த ஆகஸ்ட் மாதம் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். 

அதன்படி, இந்த நவம்பர் முதல் தேதி தொடங்கி, நவம்பர் 7 முடிய ஒரு வார காலம் நடைபெறும் இந்த விழாவைத் திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.

இதில் கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், மஞ்சுவாரியர், ஷோபானா உள்ளிட்ட திரைத்துறையினரும், யூசுஃப் அலி, ரவி பிள்ளை முதலான தொழிலதிபர்களும் பங்கேற்றார்கள். 

விழாவை தொடக்கி வைத்த முதல்வர் பினராயி விஜயன், “கேரள மக்கள் என அனைவரும் பெருமை கொள்ளும் விழாவாக ‘கேரளீயம்’ கொண்டாடப்படும்.

அந்தந்த ஆண்டின் சாதனைகளை விளக்கும் வகையில் இந்த விழா அமையும்.

சகோதரத்துவம் மற்றும் அன்பைப் பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பாக இந்த விழாவை நாம் பயன்படுத்திக்கொள்வோம்!” – என்றார்.

விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், “எப்போதும் எனக்கென்று ஒரு தனி இடம் கேரளாவில் உண்டு.

கேரள மக்கள் என்னைக் கலைஞனாகவும், அவர்களின் பிரதிநிதியாகவும் அரவணைத்திருக்கிறார்கள்.

கேரள மாநிலம் எனக்கு நிறையக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

அவற்றை என் வாழ்க்கையில் பின்பற்ற முயற்சித்திருக்கிறேன்.

என்னுடைய 21-ஆவது வயதில் நான் ‘மதனோல்சவம்’என்ற மலையாள படத்தில் நடித்தேன்.

ஷங்கர் நாயர் இப்படத்தை இயக்கியிருந்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு நான் அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கலாம் என முடிவெடுத்திருந்தபோது, 1996-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘மக்கள் திட்டம்’ மூலம் அதிகாரத்தை பரவலாக்கி நாட்டுக்கே வழிகாட்டியாக திகழ்ந்து வரும் கேரளாவின் முதல்வர் பினராயி விஜயனிடம் ஆலோசனைப் பெற்றேன்.

தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளைக் கையாளும்போது கேரளாவின் மக்கள் திட்டத்தை கவனத்தில் கொள்வேன். 

தமிழகமும் கேரளாவும் பிரிக்க முடியாத பந்தம் கொண்டவை.

நடனம், இசை, சினிமா தொடங்கி உணவு உள்ளிட்டவற்றால் இரு மாநிலங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகக் கேரளா திகழ்கிறது!” என்றார்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page