இயக்குநர் இமயத்தை இயக்கிய மகன்…

நகர்வு

Margazhi-thingal

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கியிருக்கும் முதல் படம் ‘மார்கழி திங்கள்’. 

இந்தப் படத்தை இயக்குநர் சுசீந்திரன் தயாரித்துள்ளார். 

முக்கியக் கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்துள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இதன் மூலம் இருவரும் மீண்டும் இணைந்திருப்பதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். 

படத்தின் நாயகனாக ஷியாம் செல்வன், நாயகிகளாக ரக்ஷனா, நக்ஷா சரண் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் சுசீந்திரனும் முக்கியப் பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். 

‘மார்கழி திங்கள்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் 14 அன்று நடந்தது. மூத்த கலைஞர் சிவகுமார், நடிகர் கார்த்தி, இயக்குநர் சீமான், இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர்கள் ஆர்.கே. செல்வமணி, ஆர்.வி. உதயகுமார், பேரரசு, லிங்குசாமி, திரு, தயாரிப்பாளர்கள் தனஞ்ஜெயன், சுரேஷ் காமாட்சி, தேனப்பன் உள்ளிட்ட பலரும் விழாவில் பங்கேற்றனர்.

பதிவை பகிர

பின்னூட்டம் இடுக


You cannot copy content of this page