“இன்று அடிப்படை உரிமைகளில் ஒன்று இறைச்சி!” – வெற்றிமாறன்

நகர்வு

Vetrimaran

இயக்குநர் வெற்றிமாறன் தனியார் உணவகம் ஒன்றின் திறப்பு விழாவில் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர் “ஒரு தலைமுறையைத் தீர்மானிப்பது அந்தத் தலைமுறை சிறுவயதில் சாப்பிடும் உணவுதான். என்னுடைய தலைமுறைக்கு ஆகாட்டும், எனக்கு அடுத்த தலைமுறைக்கு ஆகாட்டும் உணவால் நிறைய பிரச்சினைகள் வந்துள்ளன. உணவின் தரம், சமையலின் தரம் ஆகியவற்றை மறுசீரமைப்புக்கு உட்படுத்தி, தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

மனிதனின் வளர்ச்சியில் இன்றியமையாதது இறைச்சி என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நான் நிறைய இறைச்சி சாப்பிடுபவன்.

இந்த உணவகத்தின் முயற்சிகள் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.

இறைச்சி உணவு என்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. ஆனால், இன்றைக்கு அது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகப் பேசப்படும் அளவுக்கு மாறிவிட்டது! ” என்றார்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page