எஃப்டிஐஐ-யின் புதிய தலைவராக நடிகர் மாதவன் நியமனம்!

நகர்வு

Madhavan

புதுடெல்லி: இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (எஃப்.டி.ஐ.ஐ.) தலைவராக நடிகர் மாதவன் நியமிக்கப்பட்டு இருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருவது இந் நிறுவனம். இந்தத் துறையின் அமைச்சர்  அனுராக் தாக்கூர் இந்த நியமனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நடிகர் மாதவனுக்கு அவர் வாழ்த்துத்  தெரிவித்துள்ளார்.

“உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி. தங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் எனது சிறப்பான உழைப்பைக்  கொடுப்பேன்!” என நடிகர் மாதவன் தனது பதிலில் கூறியுள்ளார்.

எஃப்.டி.ஐ.ஐ.மகாராஷ்டிராவின் புனே நகரில் அமைந்துள்ளது.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page