ஒத்த ஓட்டு முத்தையா: 84 வயதில் கவுண்டமணி ரீ என்ட்ரி! 

நகர்வு

otha-votu-muthaiya-1

தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் கலக்கிய நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நீண்ட இடைவெளிக்குப் பின் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என்ற பெயரில் உருவாகவுள்ள அரசியல் சினிமாவில் ரீ என்ட்ரி ஆகிறார். இதனால்  ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.

84 வயதாகும் கவுண்டமணி ‘கிச்சா வயசு 16’ பட இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கும் சித்தார்த் விபின் இசையமைக்கிறார். படத்தின் புகைப்படங்கள், போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.

கவுண்டமணியுடன் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம் புலி, ரவி மரியா, வையாபுரி மற்றும் ராஜேஸ்வரி கோஸ்டர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ், மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு, நகைச்சுவை நடிகர் சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனராம். 

படப்பிடிப்பு துவங்கி, நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

கவுண்டமணி தமிழ் சினிமாவில் ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் மூலம் சிறு வேடத்தில் அறிமுகமானாலும், உண்மையில் அவர் அறிமுகம் ஆனது ரஜினி, கமல் நடித்த பாரதிராஜாவின் 16 வயதினிலே படம்தான். செந்தில் – கவுண்டமணி நகைச்சுவை தமிழ் சினிமாவில் பிரபலம். வயோதிகம் காரணமாக ஓய்வு எடுத்து வந்த அவர்  தற்போது தனது 84 வயதில் இந்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’ மூலம் மறு நுழைவு செய்கிறார்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page