தயாரிப்பாளர் வி.ஏ. துரை காலமானார்…

நகர்வு

Untitled design - 1

சென்னை: பிதாமகன், என்னம்மா கண்ணு, லூட்டி, கஜேந்திரா போன்ற படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் வி.ஏ. துரை (வயது 69) காலமானார். 

ரஜினியின் ‘பாபா’ படத்தில் நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்தவர். 

மனைவி, மகளைப் பிரிந்து சென்னை விருகம்பாக்கத்தில் தனியே வசித்துவந்த வி.ஏ. துரை நீரிழிவு நோயால் கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டுவந்தார்.

இறுதி நாட்களில் வறுமை காரணமாக திரையுலகைச் சேர்ந்த பலரது உதவியால் சிகிச்சைச் செலவுகளைச் சமாளித்து வந்தார்.

அன்றாடம் மருத்துவ செலவுகளுக்கே பணமில்லாமல் தவித்து வருவதாக சில மாதங்களுக்கு முன்பு காணொளி மூலம் உதவி கோரி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து சூர்யா, கருணாஸ் போன்ற சில நடிகர்கள் உதவி செய்தார்கள்.

இருந்தும் நோய் தீவிரத்தால் அண்மையில் அவரது ஒரு கால் அகற்றப்பட்டது.

இந்நிலையில் வி.ஏ. துரை நேற்று – அக்டோபர் 02 அன்று இரவு தனது வீட்டில் காலமானார்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page