புதுடெல்லி: நடிகர், நடிகைகளின் படங்களை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக மாற்றி சமூக வலைதளங்களில் பகிர்வதைச் சிலர் வழக்கமாகச் செய்துவருகிறார்கள்.
இப்படி பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவை வைத்துப் போலி வீடியோ ஒன்று உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய பெண் ஒருவரின் வீடியோ அது என்பதும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில் நுட்பத்தின் மூலம் அது இவ்வாறு செய்யப்பட்டதும் என்பதும் பிறகுதான் தெரியவந்துள்ளது.
இதற்கு நடிகர், நடிகைகள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மத்திய அமைச்சகம் இதுகுறித்து குற்றவாளிகளின்மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸ் இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
Add your first comment to this post