தமிழ் சினிமாவின் ஆதிக்கத்தால் மூச்சுத் திணறும் மலையாள சினிமா… 

நகர்வு

Jailer Vs Jailer

கொச்சி: ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் தமன்னா, சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

வரும் 10-ம் தேதி இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ‘ஜெயிலர்’ என்ற அதே பெயரில் மலையாளத்திலும் இன்னொரு படம் தயாராகியுள்ளது. இதனை சக்கீர்மடத்தில் இயக்கியுள்ளார். தியான் ஸ்ரீனிவாசன் நடித்துள்ள இந்தப் படமும் அதே 10-ம் தேதிதான்  வெளிவருகிறது.  

எனவே மலையாளத்தில் மட்டுமாவது ‘ஜெயிலர்’ படத்தின் தலைப்பை மாற்றுமாறு சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு சக்கீர் கோரிக்கை விடுத்திருந்தார். ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்துக்குக் கேரளாவில் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மலையாள ‘ஜெயிலர்’ படத்துக்கு வெறும் 75 திரையரங்குகள் கேட்டும் கொடுக்கப்படவில்லையாம்.

இதனால் மலையாள ஜெயிலரை இயக்கிய இயக்குநர் சக்கீர் மடத்தில் கேரள பிலிம் சேம்பரின் அலுவலக வாயிலில் ‘மலையாள சினிமாவைக் காப்பாற்றுங்கள்!’ – என்ற பதாகையைக் கைகளில் ஏந்தியபடி தனியாகப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது, ‘தமிழ் சினிமாவின் ஆதிக்கத்தால் மலையாள சினிமா மூச்சுத் திணறுகிறது!’ என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page