ட்ரெய்லரை வெளியிடுகிறார் சச்சின்: முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படம் ‘800’!

நகர்வு

800

மும்பை: பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் ‘800’ படத்தின் ட்ரெய்லரை சச்சின் டெண்டுல்கர் செப்டம்பர் 5, செவ்வாய்கிழமை வெளியிடுகிறார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு பயோபிக் திரைப்படமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

‘800’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் முதலில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சமூக வலைதளங்களில் எழுந்த தொடர் எதிர்ப்புகள் காரணமாக தான் விலகிக்கொள்வதாக விஜய் சேதுபதி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்தப் படம் குறித்த எந்தத் தகவல்களையும் வெளியிடாமல் படக்குழு அமைதி காத்து வந்தது. ஆனால், முத்தையா முரளிதரனின் வாழ்க்கைத் திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள்.    

இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டது. ‘800’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப் புகழ் நடிகர் மதுர் மிட்டல் முத்தையா முரளிதரனாகவும், மதிமலராக மஹிமா நம்பியாரும் நடித்துள்ளார்கள். இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் அசோசியேட் இயக்குநராக இருந்தவரும் ‘கனிமொழி’ (2010) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவருமான ஸ்ரீபதி இப்படத்தை இயக்கியுள்ளார்.

800 படத்தின் ட்ரைலரைப் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் செவ்வாய்கிழமை மதியம் 2.45க்கு மும்பையில் வெளியிடுவார் என்று படக்குழு அறிவித்துள்ளது.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page