பாதச் சுவடுகளிலிருந்து
பாய்ந்து வானேகும் அருவி
அஞ்சறைப் பெட்டியில் அசையுமொரு சர்ப்பம்.
இந் நிலையிலா மார்கழிக் காமம்
நீரடித் தாவரமோ
கூழாங்கல்லோ.
அனைத்தும் சிதறிக் கூடுகையில்
அணைந்தெரிகிறது கிழக்கில்
அரை நிலா.
– உமாமகேஸ்வரி கவிதைகள்
You cannot copy content of this page