கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி முடிவுகள் அறிவிப்பு / பரிசளிப்பு விழா

நகர்வு

kaviko-abdul-rahamaan

வணக்கம்!

தமிழ் படைப்புலகில் பெரும்புகழ் பெற்று மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள், ’ஹைக்கூ’ என்று அழைக்கப்படுகின்ற குறுங்கவிதை வடிவத்திலும் முத்திரை பதித்து, அக்கவிதை வடிவின் மிகச் சிறந்த ஆய்வாளராகவும் விளங்கினார். அவரது நினைவைப் போற்றும் வகையிலும், ’ஹைக்கூ’ கவிதை வடிவத்தை, தமிழ் இலக்கிய உலகில் மேலும் பரவச் செய்யும் வகையிலும், ‘கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி’ என்னும் பெயரில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக போட்டியை அறிவித்திருந்தோம்.

Art By Pachaimuthu

எங்களின் முயற்சிக்குப் பெருமளவில் அங்கீகாரம் அளிக்கும் வகையில், ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இப்போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்று தங்களின் கவிதைகளை அனுப்பியிருந்தனர். வெவ்வேறு நடுவர் குழுவின் மூன்று கட்டப் பரிசீலனைகளுக்குப் பிறகு, முதல் மூன்று பரிசுகளைப் பெற்ற கவிதைகளையும், எழுதியவர்களின் பெயர்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

முதல் பரிசு, ரூபாய்: 25.000

வானத்துச் சூரியனை

சிறிது தூரம் சுமந்து செல்கிறாள்

தயிர் விற்கும் பாட்டி – சா. கா. பாரதி ராஜா (செங்கல்பட்டு)

இரண்டாம் பரிசு, ரூபாய்: 15,000

மாடு தொலைந்த இரவு

தேடி அலையும் திசையெல்லாம்

கேட்கும் மணியோசை – பட்டியூர் செந்தில்குமார், (துபாய்)

மூன்றாம் பரிசு, ரூபாய்: 10,000

மந்தையிலிருந்து தவறிச் செல்லும்

ஒற்றை ஆட்டின் பாதை

சரியாகவும் இருக்கலாம் – ச.அன்வர் ஷாஜி,  (நாமக்கல்)

அன்புடன்,

திரைப்பட இயக்குனர்,

என்.லிங்குசாமி

முதன்மை ஒருங்கிணைப்பாளர்,

குறிப்பு: இப்போட்டியின் பரிசளிப்பு விழா, 2-.6-.2023 ஆம் நாள் சென்னையில், தி நகரிலுள்ள சர்.பி.டி தியாகராஜர் அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெறும். முதல் மூன்று பரிசு பெற்ற முன்று கவிதைகளோடு, தேர்வு செய்யப்பட்ட ஐம்பது கவிதைகளும் தொகுக்கப்பட்டு, விழாவில் ’டிஸ்கவரி பதிப்பகம்’ வாயிலாக நூலாக வெளியிடப்பட இருக்கிறது.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page