சுடலை மலரெடுத்துச்
சூடும் விழைவு பொருளற்றதன்று
பொழிநீரில் மிதந்தெழும் கருஞ்சிவப்பு
முலைக் காம்புகள்
உதிர்ந்தழிந்தாலென்ன
மாத உதிரத் துளியாக.
உறவில்லா யாருக்கோவான
ஒலிபெருக்கி ஒப்பாரியில்
அரும்பும் கண்ணீர்
நிராகரிப்பின் நிழல்களாடும்
தரை பிளந்தெனை விழுங்காதா?
திடுக்கிறேன்
கழிவறைக் கோப்பை எப்படி யோனி வடிவுற்றதென…
உதரச் சொட்டோ ஒட்டாதுதிர்ந்தது
காதல் காதலென்றெள்ளிக் கடந்துவிட்டன
கசந்த புன்னகைகள்
ஜன்னலை.
அழுகையாய் அடர்ந்தாலென்ன.
– உமாமகேஸ்வரி கவிதைகள்