கீறிய பொம்மையையும் ப்ரியம்
மாறாது அணைத்துறங்கும்
குழந்தையிடம்தான்
கற்றேன்போல.
விரிசலென்று ஒன்றுமில்லை;
ஒன்றுமில்லையென்று ஒன்றுமில்லை .
வேறொரு கிளை
பிறிதொரு நிலை
இன்னொரு திசை
மார்க்கம் நிர்பந்தமற்ற மழை
கசப்பேறாத கனவு
தேநீரில் ஏடு படிகிறது…
நாளை நாளைதானே?
– உமாமகேஸ்வரி கவிதைகள்