கனடாவில் பயங்கரவாதி – தீபச்செல்வன் நாவல் அறிமுகம்

நகர்வு

அமெரிக்காவில் நடைபெறும் இலக்கிய மாநாட்டுக்குச் செல்வதற்காக கவிஞர் தீபச்செல்வன் விண்ணப்பித்திருந்த இலங்கை விசா மறுக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை விண்ணப்பித்திருந்தும் அமெரிக்கத் தூதரகம் தனக்கு விசா வழங்க மறுத்துவிட்டதாகக் கூறியிருக்கும் தீபச்செல்வன், எதிர்காலத்தில் இந்தியாவுக்குச் செல்லவும் தனக்கு விசா மறுக்கப்படலாம் என கவலை தெரிவித்திருக்கிறார்.

இலக்கியம் சினிமா எனப் பல தளங்களில் இயங்கிவருபவர் கவிஞர் தீபச்செல்வன். அவர் எழுதிய ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’, ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ ஆகிய கவிதைத் தொகுப்புகளும், ‘நடுகல்’ என்ற நாவலும் தமிழ் வாசகப் பரப்பில் மிகுந்த கவனம் பெற்றவை. சமீபத்தில் அவர் எழுதிய ‘பயங்கரவாதி’ நாவல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் (FeTNA) 36-வது தமிழ் விழா ஜூன் 30-ம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்வில் பங்கு பெறுமாறு தீபச்செல்வனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்காக இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் விசாவுக்காக அவர் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவர் நாடு திரும்புவார் என்ற நம்பிக்கை அல்லது முகாந்திரம் இல்லை, அமெரிக்காவில் குடியேறிவிடுவார் என்று கூறி அமெரிக்கத் தூதரகம் அவருக்கு விசா வழங்க மறுத்துவிட்டது. இரண்டாவது தடவையாக விசா கோரி விண்ணப்பித்தபோதும், அதே காரணம் கூறப்பட்டு விசா மறுக்கப்பட்டது.

இந்நிலையில் தீபச்செல்வன் விடுத்துள்ள செய்தியில், ‘‘லண்டனில் மக்களின் பேராதரவுடன் பயங்கரவாதி நாவல் அறிமுக விழா இடம்பெற்ற நிலையில் வரும் மாதம் 22ஆம் திகதி பிரான்ஸில் அறிமுக நிகழ்வு ஏற்பாடாகியுள்ள தருணத்தில் வரும் மாதம் – ஜூலை 30ஆம் திகதி கனடாவில் தமிழ் தாய் மன்றத்தின் ஏற்பாட்டில் பிரமாண்டமான முறையில் பயங்கரவாதி நாவலின் அறிமுகவிழா இடம் பெறுகின்றது. அனைத்து உறவுகளும் கலந்துகொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என அழைத்து நிற்கிறேன்” என்று தீபச்செல்வன் கூறியுள்ளார்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page