அஞ்சலி – ஓவியர் மாருதி மறைந்தார்

நகர்வு

புதுக்கோட்டையில் பிறந்த மாருதியின் இயற்பெயர் வி. ரங்கநாதன். வயது 86.


புனே நகரில் மகள் வீட்டில் தங்கியிருந்த மாருதி, உடல்நலக் குறைவு காரணமாக இன்று, ஜூலை 27 வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் காலமானார். 20.4.1959 அன்று மாருதியின் முதல் ஓவியம் குமுதத்தில் வெளிவந்தது. அதன் பின் மாருதி அவர்களின் ஓவியங்கள் இடம்பெறாத வார இதழ்களோ மாத இதழ்களோ இல்லை எனலாம்.

கண்மணி, பொன்மணி, விகடன், குமுதம், குங்குமம் போன்ற இதழ்களுக்கு அட்டைப்படமும், கதை கவிதைகளுக்கு ஏற்ற ஓவியங்களும் வரைந்துள்ளார். உருண்டை விழிகளும் குண்டு கன்னங்களுமாய் மாருதி வரையும் பெண்களின் ஓவியங்களுக்கு பெரும் ரசிகர் ரசிகை கூட்டமே உண்டு. புகைப்படங்கள் உயிர் கொண்டு வந்தனவோ என எண்ணும்படி இவரின் ஓவியங்களில் ஒரு வசீகரம் இருக்கும். மிகப்பெரும் புகழ்பெற்ற சிறந்த ஓவியரான மாருதி தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

ஓவியர் மாருதியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது நகர்வு.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page