மலையாளத்தில் எம். ஆர். ரேணுகுமார் எழுதிய மாவீரன் அய்யன்காளி நூலின் தமிழ்ப்பதிப்பு வெளியீடு நாளை 15-09-2023 வெள்ளிக்கிழமை அன்று நிகழ இருக்கிறது.
சென்னை எழும்பூரில் உள்ள நீலம் புக்ஸ் மையத்தின் முதல் தளத்தில் நடைபெறும் நிகழ்வில் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுபவர் சன் நியூஸ் முதன்மை ஆசிரியர் மு. குணசேகரன் அவர்கள். நூல் மதிப்புரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வனும் இயக்குநரும் எழுத்தாளருமான தமயந்தி அவர்களும். தமிழில் மொழிபெயர்ப்பு ஊடகவியலாளர் ஜேம்ஸ் மார்க் பீட்டர்.