சிம்புதேவனின் போட்: முழுக்க முழுக்கக் கடலில் உருவான படம்…  

நகர்வு

Boat

இம்சை அரசன் 23-ம் புலிகேசி, அறை எண் 305- ல் கடவுள், புலி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், கசடதபற போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சிம்புதேவன். அவர் தற்போது இயக்கியுள்ள படம்தான் ‘போட்’. 

ஒரே சமயம் ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரிக்கிறார். 

யோகி பாபு, கௌரி ஜி கிஷன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை. மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு.

முழுக்க முழுக்கக் கடலில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் கதை, 1940-களின் பின்னணியில் உருவாகியுள்ளதாம்.

சென்னையின்மீது ஜப்பான் குண்டு வீசியபோது உயிருக்கு அஞ்சி 10 பேர் சின்னப் படகில் தப்பிக்கிறார்கள்.

நடுக்கடலில் அந்தப் படகு நகர முடியாமல் நின்று விடுகிறது. அவர்கள் அதில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் போட் படத்தின் கதை.

இந்தப்படம் த்ரில்லர், ஆக்சன், அரசியல் நகைச்சுவை கலந்து உருவாக்கப்பட்டுள்ளதாம்.

அண்மையில் இதன் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது பிப்ரவரியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page