‘கலைஞர் 100’ விழாவில் கமல், ரஜினி.

நகர்வு

Kamal Rajini Invited To Kalaignar 100

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா திமுக சார்பில் ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டம் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது.

அதில் ‘கலைஞர் நூற்றாண்டு விழா’வை மிகச் சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.

அதன்படி தமிழ்த் திரைப்பட வளர்ச்சியில் கலைஞரின் பங்களிப்பைப் போற்றும் விதமாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ‘கலைஞர் 100’ விழா நடைபெற உள்ளது. 

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல சினிமா நட்சத்திரங்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இருவரையும் கடந்த நவம்பர் மாதம் நேரில் சந்தித்து இவ் விழாவுக்கான அழைப்பிதழ் வழங்கினர். 

சென்னையில் கடந்த டிசம்பரில் பெய்த கனமழையால் கடும் வெள்ளம் ஏற்பட்டது.

இதனால் விழா 2024 ஜனவரி 6 ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் விழாவுக்கான புதிய அழைப்பிதழ் மீண்டும் கமல் மற்றும் ரஜினி இருவருக்கும் நேரில் வழங்கப்பட்டது. 

இருவரும் இந்த விழாவில் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இச்சந்திப்பில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். 

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page