கமல்ஹாசன்: கலைப்பணியில் 64 ஆண்டுகள்!

நகர்வு

Kamal

சென்னை: உலக நாயகன் என்று அறியப்பட்ட கமல்ஹாசன் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகத் தனது 6 வயதில்  திரைத்துறைக்கு வந்து தற்போது 64-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், அவரைப் பலரும் வாழ்த்திவருகின்றனர்.

தம்மை வாழ்த்தியவர்கள் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்திருக்கிறார். 

முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான குடியரசு தலைவர் விருதைப் பெற்றவர் கமல். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த படம் என்ற முறையில் தயாரிப்பாளராக 1 தேசிய விருதும், 10 தமிழக அரசு திரைப்பட விருதுகள்கள், 4 ஆந்திர அரசின் நந்தி விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்பட பல இந்திய விருதுகளை வென்றுள்ளார். 

இவர் சிறந்த பிறமொழிப்படத்திற்கான, அகாதமி விருதிற்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமானவற்றிலும் நடித்திருந்தார். நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர்இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார். 

இந்தியத்  திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பணிக்காக பத்ம பூஷண்பத்மஸ்ரீ விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. 

சத்தியபாமா பல்கலைக்கழகம் கமல்ஹாசனுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.  நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்குப் பிறகு 2016 இல் கமல் செவாலியே விருது பெற்றார்.

கமல்ஹாசன், “64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க! என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள், என் மக்களுக்காக. உங்கள் நான்” என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாகத் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன், தமிழ் தவிர இந்திதெலுங்குமலையாளம்கன்னடம்வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார். 

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page