‘மலைக்கோட்டை வாலிபன்’: சிறந்த திரையரங்க அனுபவம் தருமாம்!

நகர்வு

Mohanlal-in-Malaikottai-Vaaliban

‘மலைக்கோட்டை வாலிபன்’ எனும் புதிய படம் குறித்து அது தொடர்பாக கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அதன் நாயக நடிகர் மோகன்லால் கூறியது:

“மலைக்கோட்டை வாலிபன் பிரமாண்டமான படமாக இருக்கும்.

படத்தில் உள்ள பல விஷயங்களை உங்களோடு தொடர்புபடுத்திக் கொள்ள முடியும்.

காதல், பொறாமை என பல்வேறு உணர்ச்சிகளை உள்ளடக்கிய படமாக இது இருக்கும்.

படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள், அதன் கதைசொல்லல் முறை மற்றும் உடைகள் ஆகிய எல்லாமே முற்றிலும் வித்தியாசமானவை.

இப்படியான கதாபாத்திரத்தில் நடித்தது எனக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன். இதைவிட வேறு என்ன வேண்டும்.

இப்படத்தின் கதை எனக்காகவே பிரத்யேகமாக எழுதப்பட்டதல்ல.

நானும், இயக்குநர் லிஜோவும் பல கதைகள் குறித்து விவாதித்தோம்.

அதில் நான் இந்தக் கதையை தேர்வு செய்தேன்.

நீங்கள் எல்லோரும் இந்தப் படத்தை திரையரங்குகளில் வந்து பாருங்கள்.

அதுதான் நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்வது.

உங்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் ஒரு வருட உழைப்பைச் செலுத்தியுள்ளோம்!” – என்று கூறினார்.

இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி பேசுகையில், “இந்தப் படத்தைப் பொறுத்தவரை அதை எந்த ஒரு குறிப்பிட்ட வகைமைக்குள்ளும் அடைக்க முடியாது.

பார்வையாளர்கள் என்ன உணர்கிறார்களோ அதுதான் படம்.

கதை இந்தக் காலக்கட்டத்தில்தான் நடக்கிறது என்றில்லாமல், எல்லா காலத்துக்கும் பொருந்தும் வகையில் உருவாக்கியுள்ளோம்!” – என்றார். 

மலையாளத்தில் ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’, ‘சுருளி’,‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. 

சென்ற ஆண்டு ஜனவரியில்  ராஜஸ்தானில் மலைக்கோட்டை வாலிபனின் படப்பிடிப்பு தொடங்கியது.

அங்கு பொக்ரானில் ஏராளமான வெளிநாட்டு துணை நடிகர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்றது.

மோகன்லாலுடன் மணிகண்டன் ஆர்.ஆச்சாரி, சோனாலி குல்கர்னி மற்றும் ஹரீஷ் பேரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரசாந்த் பிள்ளை இசை.

இந்தப்படம் இந்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page