“இங்கே இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை!” – விஜய் சேதுபதி.

நகர்வு

Merry Christmas

சென்னை: விஜய்சேதுபதி, கத்ரீனா ஃகைஃப் நடிப்பில் ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ள படம் மெர்ரி கிறிஸ்துமஸ்

இது ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. 

இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

இதில் கலந்துகொண்ட நடிகர் விஜய்சேதுபதி கூறியதாவது: 

“96 படம் பார்த்துவிட்டு இயக்குநர் மெசேஜ் அனுப்பினார். அதன்பின் இருவரும் அரை மணிநேரம் பேசினோம்.

அவருடைய முதல் படம் என்னுடைய பிறந்தநாள் அன்று வெளியானது.

அப்போது என் நண்பர் ஒருவர் என்னிடம், “ராம்கோபால் வர்மாவின் உதவி இயக்குநர், ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருக்கிறார்” – எனக் கூறினார்.

அவரின் அந்த முதல் படம் எனக்கு மிகவும் பிடித்தது.

அப்போது இவரிடம் பணியாற்ற வேண்டும் என்ற ஆசைபிறந்தது.

என்னிடம் அவர் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தின் கதையைச்  சொன்னார்.

அது பிடித்திருந்தது. நடிகர்களுக்கு சுதந்திரம் கொடுப்பவர் ஸ்ரீராம் ராகவன். நம்மை அவர் எப்படி வேலை வாங்குவார் என்பதே தெரியாது.

அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவம்.

கத்ரீனா கைஃபை நேரில் பார்த்து எனக்கு ஒரு வியப்பு.

நம்மைவிட சீனியர் என்ற பயம் எனக்குள் இருந்தது.

ஆனால், அவரிடம் எந்தத் தலைக்கணமும் இல்லை.

அவருடன் பணியாற்றியது மிகவும் நிறைவாக இருந்தது.

ஃபர்சியில் நடிக்கும்போது இந்தி கடினமாக இருந்தது. இப்போது பழகிவிட்டது.” – என்றார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விஜய்சேதுபதி,

“ஆமிர்கான் வந்தபோதுகூட இந்தி தொடர்பான கேள்வியைக்  கேட்டீர்கள்.

அது எதற்கு என்பது எனக்குப் புரியவில்லை.

இப்போது என்னிடமும் கேட்கிறீர்கள்.

தமிழகத்தில் இந்தி படிக்கக் கூடாது என யாரும் சொல்லவில்லை.

இந்தியைத் திணிக்கக் கூடாது என்றுதான் சொன்னார்கள்.

உங்களின் கேள்வியே தவறானது.

இங்கே இந்தி படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். யாரும் தடுக்கவில்லை!” – என்றார்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page