இயக்குநர் பாரதிராஜா இயக்கிய என் உயிர்த் தோழன் திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் பாபு காலமானார்.
இயக்குநர் விக்ரமனின் இரண்டாவது படமான பெரும்புள்ளி, தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். மனசார வாழ்த்துங்களேன் என்ற திரைப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட விபத்தால் முதுகுத்தண்டில் அடிபட்டு படுத்த படுக்கையானார். 1991 லிருந்து படுக்கையிலே சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று (18-09-02023) காலமானார்.