கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி கவி ஓவியா பதிப்பகம் வைத்து நடத்தியவர். அதன் மூலம் கவிதை போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி வந்தார். அறுவை சிகிச்சை நடந்து சிகிச்சை எடுத்துவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (12-09-2023) காலமானார். கவிஞரை இழந்துவாடும் அவரது குடும்பத்துக்கு நகர்வு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
கவிஞரின் படைப்புகள் சில
நிழலுதிர் நேரம் – கவிதைகள்
நிலவின் புன்னகை- ஹைக்கூக்கள்
வட்டநிலா வானத்துல நீயும் பாரு – குழந்தைப்பாடல்கள்
வென்று காட்டலாம் வா- வாழ்வியல் கட்டுரைகள்
அரங்க மின்னல்கள் – கவியரங்கக் கவிதைகள்
நகர்ந்து செல்லும் நத்தைக் கூடுகள்- ஹைக்கூக்கள்
மகிழம்பூ மணக்கும் தெரு – கவிதைகள்
அன்றில்கள் – ஹைக்கூக்கள் – இணையர் ரேவதியுடன் இணைந்து எழுதிய தொகுப்பு..