துளிரின் ஜி. நாகராஜன் விருது – அகரமுதல்வனுக்கு வாழ்த்து

நகர்வு

இன்று மாலை 6 மணி அளவில் திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் அமைந்துள்ள வர்த்தக சங்க அரங்கத்தில் துளிர் நண்பர்கள் அமைப்பின் நிகழ்வு நடைபெற இருக்கிறது. ஆனந்த விகடனில் வெளிவந்த எழுத்தாளர் பவா. செல்லத்துரையின் சொல்வழிப்பயணம் தொடர் புத்தகமாக வெளிவந்ததை அறிமுகப்படுத்தும் ஒன்றாகவும் துளிர் அமைப்பின் விருது வழங்கும் நிகழ்வும் நடைபெறுகிறது.

திண்டுக்கல் துளிர் இலக்கிய நண்பர்கள் சார்பாக ஒவ்வொரு வருடமும் ஒரு எழுத்தாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் படைப்பூக்க விருது வழங்குகிறார்கள். இந்த வருடத்திற்கான எழுத்தாளருக்கான படைப்பூக்க விருது எழுத்தாளர் அகர முதல்வனுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்நிகழ்வை இன்னும் விரிவாக்கி அடுத்த வருடத்தில் இருந்து ஒரு கவிஞருக்கும் 50 ஆயிரம் ரூபாய் படைப்பூக்க விருது வழங்கலாம் என முடிவெடுத்து உள்ளார்கள். கவிதைகளுக்கான விருதை கவிஞன் பிரான்சிஸ் கிருபா பெயரில் வழங்குகிறார்கள். எழுத்தாளருக்கான விருதை ஜி. நாகராஜன் பெயரிலும் கவிஞருக்கான விருதை பிரான்சிஸ் கிருபா பெயரிலும் வழங்குவது விருதுகளுக்கான பெருமையே.

2023 வருடத்துக்கான துளிர் அமைப்பின் ஜி. நாகராஜன் விருதினைப் பெறும் எழுத்தாளர் அகரமுதல்வனை நகர்வு இணையதளம் வாழ்த்துகிறது.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page