மும்பை: “தென்னிந்தியப் படங்களுக்கு ரசிகன் நான்!” – என்று நடிகர் ஷாருக்கான் பேசியுள்ளார்.
ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படம் ரூ.700 கோடி வசூலித்து உலக அளவில் சாதனை படைத்து வருகிறது.
ஜவானின் வெற்றி விழா மும்பையில் நடைபெற்றது. ஷாருக்கான், அட்லீ, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட படக்குழுவினர் அதில் கலந்துகொண்டனர்.
நயன்தாரா தனது தாயாரின் பிறந்தநாள் காரணமாக நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்று கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
நிகழ்வில் ஷாருக்கான் பேசும்போது, “கொரோனா காரணமாக ‘ஜவான்’ படத்தை எடுத்துமுடிக்க 4 ஆண்டுகள் ஆகிவிட்டன.
தென்னிந்தியாவைச் சேர்ந்த பலரும் மும்பையில் தங்கி 4 ஆண்டுகளாக இரவு, பகலாக படத்துக்கு உழைத்திருக்கிறார்கள்.
இயக்குநர் அட்லீயும் அதில் ஒருவர்.
அவர்கள் எல்லோருக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மொழி புரியாவிட்டாலும் தென்னிந்தியாவிலிருந்து வெளியாகும் படங்களுக்கு நான் எப்போதும் ரசிகன்.
நல்லவேளை தற்போது டப்பிங்கிலும், சப்டைட்டிலிலும் படங்களைப் புரிந்து பார்க்க முடிகிறது.
‘ஜவான்’ அனைத்து இந்தியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நேர்மையான ஒவ்வொரு இந்தியரும் ஒரு ‘ஜவான்’தான்!
’ஜவான்’ படத்துக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி!” என்றார் ஷாருக்கான்.