ஆஸ்கர் தகுதிச் சுற்றில் மலையாளப் படம்:

நகர்வு

The Face Of The Faceless

ஒரிஜினல் பாடல் பிரிவில் ‘தி ஃபேஸ் ஆஃப் தி ஃபேஸ்லஸ்’!

உலகின் தலை சிறந்ததாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது.

96-வது ஆஸ்கர் விருதுகளின் ‘சிறந்த அசல் பாடல்’ பிரிவில் மலையாளத்தின் ‘தி ஃபேஸ் ஆஃப் தி ஃபேஸ்லஸ்’ (The Face of the Faceless) படம் தகுதிச்சுற்றுப் பட்டியலில் தேர்வாகியுள்ளது என்பதைப் படக்குழு தெரிவித்துள்ளது.

சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவின் போட்டிக்கு இந்தியாவிலிருந்து மலையாளப் படமான ‘2018’ அதிகாரபூர்வமாக அனுப்பிவைக்கப்பட உள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

இப்போது வின்சி அலோஷியஸ் நடிப்பில் வெளியான ‘தி ஃபேஸ் ஆஃப் தி ஃபேஸ்லஸ்’ மலையாளப் படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் ஆஸ்கர் விருதின் ‘சிறந்த அசல் பாடல்’ பிரிவுக்கான தகுதிச் சுற்று பட்டியலில் தேர்வாகியுள்ளனவாம்.

இந்தப் படத்தை ஷைசன் பி ஓசெஃப் இயக்கியுள்ளார். அல்ஃபோன்ஸ் ஜோசஃப் இசையமைத்துள்ளார்.

சென்ற ஆண்டு எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாடு’ சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page